சுகநலம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்

கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள்
கொய்யா இலை – 5 தண்ணீர் – 2 கப்
ஏலக்காய் – 2
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – தேவையான அளவு.
செய்முறை
பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க விடுங்கள்.
கொதித்து வரும் போது அதில் சிறிதளவு டீத்தூள் மற்றும் எடுத்து வைத்துள்ள கொய்யா இலை போட்டு அதன் பின் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடுங்கள்.
நன்றாக கொதித்து இலையின் சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி ஏதாவது ஒன்று சேர்த்து கலந்து வடிகட்டி பருகலாம்.
இதை மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறையும்.