இலங்கை
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 எண்ணெய் மாதிரிகளின் முடிவுகள் வெளியாகின

நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் 125 எண்ணெய் மாதிரிகள் வர்த்தக நிலையங்களில் பெறப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவரு அததெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அதில், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் மாதிரிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த அனைத்து மாதிரிகளும் பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் அடங்கியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.