Connect with us

இலங்கை

பாடசாலை முதலாம் தவனை ஆரம்பித்தல் , பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

Published

on

இவ்வாண்டுக்கான முதலாம் தவனைக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிருபத்திற்கு அமைவாக வித்தியாலய அதிபர் வி.எஸ்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையினை கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கும், பாடசாலையின் கற்றல் நடவடிக்கைள், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் போன்ற விடயங்களை தெளிவு படுத்தும் வகையில் இக் கூட்டம் நடைபெற்றது