இலங்கை
பாணி மருந்தை பெற மீண்டும் மக்கள் கூட்டம்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, கேகாலை தம்மிக்க நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணி இன்றும் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
கேகாலை – நெலும்தெனிய உடுகும்புற பகுதியிலுள்ள அவரின் வீட்டுக்கு அருகில் பாணி பகிர்ந்தளிக்கப்பட்டது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடையாளம் இடப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் பாணியை பெற்றுக் கொண்டனர்.
கடந்த நாட்களில் பணத்திற்கே இந்த பாணியை வழங்கிய போதும், இன்று இலவசமாக பாணி விநியோகிக்கப்பட்டதாக தம்மிக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.
Continue Reading