Connect with us

அழகு குறிப்புகள்

பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால்….

Published

on

பால் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருளாகும், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை என்று அனைவருக்குமே தெரியும்.

தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகமும் அதிக அழகு பெரும் என்று யாருக்காவது தெரியுமா.

அட ஆமாங்க பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

அதுமட்டும் இன்றி முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.

pimpils
சருமத்தை இளமையாக வைத்திருக்க அழகு குறிப்புகள் :-

சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள தினமும் பாலை முகத்தில் தடவிவர வேண்டும்.

இதன் மூலம் முகத்தில் தோன்றும் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை பிறக்க வைப்பதுடன் முகம் பளபளக்க செய்யும்.

முகத்தில் தோன்றும் சுருக்கங்களை அகற்றி முகத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்கிறது.

வாரத்தில் இரு முறையாவது உடல் முழுக்க பாலை தடவி அல்லது குளிக்கும் நீரில் பாலை கலந்து குளித்து வரலாம்.

இதன் மூலம் முகத்தில் தோன்றும் எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும்.

மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முகம் சுருக்கம் நீங்க அழகு குறிப்புகள் :-

முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும்.

தினமும் பாலுடன் 1/2 துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து (azhagu kurippu) விடும்.
வறண்ட சருமம் பொலிவு பெற அழகு குறிப்புகள்:-

முகம் வறண்டு போனால் நாம் வழக்கமாக மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்ஸ் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே அதற்கு பதிலாக முகத்திற்கு மாய்சரைசராக பாலை பயன்படுத்தலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *