Connect with us

சுகநலம்

புத்துணர்ச்சி தரும் அதிகாலை துயிலெழுதல்

Published

on

அதிகாலைப் பொழுதில் துயில் எழுவது மிகப்பெரிய சாதனையாளர்களின் பழக்கமாக ஆக இருந்து வருவது.

அதிகாலையில் துயில் எழும் போது நமக்கு, நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியோடு மனமகிழ்வோடு இருக்கும். மேலும் நமக்கு ஒவ்வொரு நாளும் அதிகப்படியான நேரங்கள் கிடைத்தது போல் இருக்கும். காரணம் காலை நேரத்தில் நம்மால் மிக விரைவாக வேலைகளை செய்து முடிக்க முடியும். நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் அதிக பரபரப்பு இல்லாமல் தட்பவெட்ப நிலையும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு நாம் காலையில் எழுந்து கொள்ளும் போது சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நலம். பின்னர் அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து அன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிடலாம்.


காலை உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ண வேண்டும். அவசரஅவசரமாக உணவு உட்கொள்வது உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பது போன்றவை இல்லாமல் நிதானமாக உண்ண வேண்டும்.

நாம் அணியும் ஆடை மிக முக்கியமானது எனவே நாம் அன்றைய தினம் அணியப் போகும் ஆடையை நம் விருப்பப்படி தேர்வு செய்து அணிய வேண்டும். நம் உடலில் இருக்கும் நேர்த்தியும் அழகும் தான் நம்மை புதிதாக பார்ப்பவர்களுக்கு நம்மேல் ஒரு மரியாதையை உண்டு செய்யும்.
நாம் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான வேலை எதுவோ அதை கூடியமாணவரை காலை பத்து பதினோரு மணிக்குள் முடித்துவிடவேண்டும். அப்போதுதான் மீதி உள்ள நேரம் நமக்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் இயல்பாக நம்மால் பணியை செய்ய முடியும். மற்ற பணிகளில் எந்த வேலை அதிக பயன் தரக்கூடியது என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொன்றாக செய்து கொண்டு வரவேண்டும். சில வேலைகளை மற்றவர்களை வைத்து செய்து கொள்ளலாம். எல்லா வேலையும் தானே செய்கிறேன் என அதிகப்படியான பணிச்சுமையை எடுத்துக் கொள்ளக்கூடாது.

நாம் தினப்படி பணிகளை செய்து வரும்போது அவ்வப்போது சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வதன் மூலமே தொடர்ந்து நம்மால் சிறப்பாக செயல்களை செய்ய முடியும்.

நான் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வேன் என்பது சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் பல ஆயிரம் மைல் கடந்தவன் ஒவ்வொரு மைலாக தான் கடந்தான். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே ஒவ்வொரு வேலையாக கவனம் செலுத்தி ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் எல்லா வேலையும் கெட்டுப் போகலாம். சரி இவ்வாறு பணி செய்யும் போது நமக்கு சில நேரங்களில் அதிகப்படியான சோம்பல் வரலாம். இதை அவரவர்கள் அவரவர்களின் சூழலுக்கு ஏற்ப தான் விரட்டி அடிக்க முடியும். உங்களின் சோர்வின் காரணத்தை கண்டறியுங்கள். உங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய செய்திகளை எண்ணங்களை மனதில் கொண்டு வாருங்கள். நீங்கள் கடந்து போக வேண்டிய தூரத்தை நினைவில் வையுங்கள். ஜெயித்தவர்கள் உருவத்தை உங்கள் மனதில் பதிய வையுங்கள்.


இவையெல்லாம் உங்களை சோர்ந்து கிடக்கும் போது தட்டி எழுப்பும். உங்கள் மனதில் தோன்றுகின்ற அனைத்தையும் ஒரு தாளில் அவ்வப்போது எழுதுங்கள். இவ்வாறு எழுதுவது சிறந்த பயனளிக்கும். உதாரணமாக நீங்கள் மகிழ்வாக இருக்கும் தருணம், உங்களுக்கு உதவி செய்தவர்களை பற்றி, நீங்கள் வியக்கும் சம்பவங்களைப் பற்றி, நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றி, என உங்கள் எண்ணங்களை இவ்வாறு பதிவிடும் போது பிறகு அதை திரும்ப படிக்கும்போது உங்களுக்குள் ஒரு புதிய மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.

நாள் முழுவதுமே போதுமான அளவு தண்ணீரை அவ்வப்போது உட்கொள்ள வேண்டும். சத்தற்ற உணவுகளை சுகாதாரம் இல்லாத சூழலில் விற்கும் உணவுகளை முழுவதுமாக தவிர்ப்பது நல்லது.
நடைப்பயிற்சி சைக்கிள் ஓட்டுதல் யோகாசன பயிற்சி என உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடங்களாவது செய்வது நன்மை பயக்கும். உங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் கலந்துரையாட கட்டாயம் குறிப்பிட்ட நேர அளவு ஒதுக்குங்கள். இரவு தூங்க செல்வதற்கு 2 மணி நேரம் முன்பே உணவு உட்கொள்வது சிறப்பு தூங்கச் செல்லும் பொழுது இன்றைய பொழுது சிறப்பாகக் அமைந்ததை பற்றியும் செய்ய முடியாத செயல்களை அடுத்த நாள் செய்து கொள்ளலாம் என்கின்ற மனநிறைவோடு தூங்கச் செல்லுங்கள்.