இலங்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.
நாரஹேன்பிட்டியவிலுள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்டோரும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
Continue Reading