Connect with us

இலங்கை

போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது!

Published

on

போதைப்பொருள் மற்றும் அதனூடாக சம்பாதித்த 1,030,670 ரூபாவிற்கு அதிகமான பணத்துடன் வத்தள பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தள புகையிரத பாதை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து 101 கிராம் ஹெரோயின், 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,030,670 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தள பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.