அறுசுவை
மகிழ்ச்சியை தூண்டும் புதினா

மகிழ்ச்சியை தூண்டும் புதினா
விதம் விதமான சமையலில் புதினா உணவு உலக அளவில் பிரசித்தம். புதினாவை வாசனை திரவியமாக பார்க்கிறோம். புதினா பசியைத் தூண்டக்கூடிய இயற்கையான அருமருந்து. புதினா வாதத்தைக் கட்டுக்குள் வைக்கும், வயிற்றில் உண்டாகும் வாயுவைக் குறைக்கக் கூடிய அருமையான மருந்து.
புதினா, வயிற்றின் அமிலத்தன்மையை குறைத்து காரத்தன்மையை அதிகப்படுத்தும். மருந்தாக பயன்படுத்தினால் புதினா சாறு 30 மிலி அளவுக்கு அல்லது விழுது எடுத்து கொட்டைப்பாக்கு அளவு மருந்தாக பயன்படுத்தலாம்.மனம், செரிமானம் சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்களுக்காகவும், மனதில் மகிழ்ச்சியை தூண்டக்கூடிய மூலிகையாகவும், புதினா இருக்கிறது.
புதினா, மருத்துவ மூலிகையாகும். நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்.
*புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோபிளேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறாது.
*அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும்.
*ரத்தத்தை சுத்திகரிக்கும்.
*வாயு தொல்லையை நீக்கி வயிற்று புழுக்களை அழிக்கும்.
*புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
*மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்தது.
*முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
*புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
*புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.