Connect with us

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

Published

on

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துவருகின்றது.
கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடுமை மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி உட்பட பல வீதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததன் காரணமாக வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை ஆணையாளர் எம்.தயாபரன்,பிரதி ஆணையாளர் மா.சிவராஜா உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வெள்ள நீரை வழிந்தோடச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாநகரசபையின் வாகனங்களை பயன்படுத்தி வெள்ள நீரை வழிந்தோடச்செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள்,நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா,வேலூர்,கூழாவடி,மாமாங்கம்,குமாரபுரம்,புன்னைச்சோலை,இருதயபுரம்,கறுவப்பங்கேணி,பாரதி வீதி,எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பலர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது.

இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தெரிவிக்கின்றன.

போரதீவுப்பற்று,பட்டிப்பளை,வவுணதீவு,ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலகப்பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.