இலங்கை
முகக்கவசம் அணிவதனால் ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு நன்மை

முகக்கவசம் அணிவதால் சுவாசம் சார்ந்த நோய்கள் பாரிய அளவில் குறைவடைந்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஜாஎல ஓபாத்த பிரதேசத்தில் முகக்கவச உற்பத்தி நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த உற்பத்தி நிலையத்தில் என்-95 மற்றும் சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இலங்கைக்குத் தேவையான முகக்கவசங்களை இங்கு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதுடன், மேலதிக உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Continue Reading