இலங்கை
யாழ்ப்பாணம் – நிலாவரை கிணறு அருகாமையில் அகழ்வுப் பணி

யாழ்ப்பாணம் – நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த பகுதி யில் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது எனவும், அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் இப் பணிக்காகவருகை தந்த அதிகாரிகள் திரும்பி செல்லும் வரை தவிசாளர் உட்பட அரசியல் பிரதிநிதிகளும் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.