இலங்கை
யாழ் நகர நீர் விநியோக திட்டத்தை துரிதப்படுத்தல்

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நகர நீர் விநியோக திட்டம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி P.S.M.சார்ள்ஸ் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.
ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், இந்த திட்டம் தடைப்பட்டிருந்ததாகவும், இதன் தேவை தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் உலக வங்கியின் அனுசரணையுடன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக அறிவித்தார்.
இதனால் இந்த நகர நீர் விநியோக திட்டம் ஒரு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை பெற்றபின்னர் சட்ட ரீதியிலான பெறுகை நடவடிக்கையின் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களில் ஒத்துழைப்புடன் ஒரு வருட காலத்திற்குள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதற்கு மேலதிகமாக யாழ் மக்களுக்கு அவர்களது நாளாந்த வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட ஆளுநர் இந்த விடயத்தில் விசேடமாக வர்த்தக சந்தை, பஸ் தரிப்பு மற்றும் பொது இடங்களில் பெண்களுக்காக ஓய்வு விடுதிகள் மற்றும் இயற்கை கழிவறை வசதிகளுக்காக இட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
இந்த கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், துணை செயலாளர், யாழ் மாவட்ட செயலாளர், மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.