இலங்கை
ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேற்று (22) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த சம்பந்தப்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தலைமையில் போக்குவரத்து அமைச்சில் இன்று காலை 11.30 மணிக்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் ரயில் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
Continue Reading