சினிமா
ராஷ்மிகாவுக்கு முன்னாள் காதலன் வாழ்த்து

கன்னட நடிகை ராஷ்மிகா, தெலுங்கில் சில
படங்களில் நடித்தார். தமிழில் கார்த்தி
ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார்.
அவரும், ரக்ஷித் ஷெட்டியும் கிரிக் பார்ட்டி
என்ற கன்னடப் படத்தில் ஜோடியாக
நடித்தனர். அப்போது இருவரும்
காதலித்தனர். திருமணம் செய்துகொள்ள
இருவீட்டாரிடம் சம்மதம் பெற்றனர். 2018ல்
பெங்களூருவில் நிச்சயதார்த்த விழா
நடந்தது. ஆனால், திடீரென்று ஏற்பட்ட
கருத்து வேறுபாடு காரணமாக ரக்ஷித்
ஷெட்டியுடனான காதலை முறித்துக்கொண்ட ராஷ்மிகா, சினிமாவில்
தொடர்ந்து நடிக்க விரும்பி, நிச்சயதார்த்த
விழாவை நிறுத்திவிட்டார். பிறகு அவர்
ரக்ஷித் ஷெட்டியிடம் பேசுவது இல்லை.
இந்நிலையில், கிரிக் பார்ட்டி படத்தில்
இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி 100
மில்லியன் பார்வையாளர்களை
கடந்துள்ளதை நினைவுகூர்ந்த ராஷ்மிகா,
அதுபற்றி டிவிட்டரில் பதிவு செய்தார்.
அதற்கு பதிலளித்த ரக்ஷித் ஷெட்டி,
‘சினிமாவில் மேலும், மேலும் நீங்கள் வளர
வேண்டும்’ என்று வாழ்த்து
தெரிவித்துள்ளார்.