Connect with us

இலங்கை

வடக்கு, கிழக்கில் 71 பேருக்கு தொற்று

Published

on

நேற்று (20) முதல் இன்று (21) காலை வரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் புதிதாக 770 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்களில் இருவர் வௌிநாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களாவர்.எஞ்சிய 768 பேருள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 270 பேர், கம்பஹா மாவட்டத்தில் 80 பேர், அம்பாறை மாவட்டத்தில் 05 நபர்கள், வவுனியா மாவட்டத்தில் 26 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 09 பேர், மன்னார் மாவட்டத்தில் 36 பேர், மொனராகலை மாவட்டத்தில் ஐவர், கேகாலை மாவட்டத்தில் 09 நபர்கள், மாத்தளை மாவட்டத்தில் 40 பேர், திருகோணமலை மாவட்டத்தில் நால்வர், புத்தளம் மாவட்டத்தில் 13 பேர் மற்றும் பதுளை மாவட்டத்தில் நால்வர் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.