இலங்கை
வவுனியாவில் அசாதரண சூழ்நிலை – கொரோனா அச்சம்.

வவுனியாவில் நகரத்தின் பஸார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி ஆகியான நேற்றைய தினம் மூடப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் வவுனியா நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. வவுனியா நகரப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதேவேளை இந்த அதிகரிப்பு பிற இடங்களுக்கும் பரவும் அபாயம் காணபப்டுவதனாலும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் திடீரெனெ அப்பகுதிகளும் முடக்கப்படும் நிலை ஏற்படும். இதன் காரணமாகவே மக்களின் நடமாட்டம் குறைந்து காணபப்டுகிறது.
பஸார் வீதி, தர்மலிங்கம் வீதிகளின் கடைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன. கடைகள் மூடப்பட்டுள்ளதாலும் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. நகரத்தை அண்டிய மற்றைய பகுதிளில் சராசரியான மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. தங்களுக்குள் கொரோனா இருக்கலாம், அல்லது பரவலாம் என்ற நிலை குறைவாக காணப்படுவதே இந்த மக்கள் நடமாட்டத்துக்கு காரணமாக இருக்கிறது. மக்கள் அவதானமாகவும், பொறுப்புடனும் நடந்து கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
நேற்றைய தினம் வெளியான பரிசோதனை முடிவுகளின் படி பஸார் வீதியில் 55 நபர்களுக்கும், பட்டாணிச்சூர் பகுதியில் 7 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூடப்பட்டுள்ள பஸார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி ஆகியன 14 நாட்களுக்கு மூடப்படும் நிலை காணப்படுகிறது.