இலங்கை
வவுனியாவில் பெரும்போக நெல் உற்பத்தி வெற்றி

இம்முறை பெரும்போக நெல் உற்பத்தி நடவடிக்கையில் வவுனியா மாவட்டத்தில் 35,000 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
பருவ மழை மூலம் வவுனியாவில் குளங்கள் நிரம்பியுள்ளன. இதனை தொடர்ந்து நெல் வயல்களில் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கமைவாக 35,000 ஹெக்டர் நிலப்பரப்பில் இம்முறை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதுடன், விவசாயிகளுக்கு தேவையான உரம் வவுனியாவில் உள்ள 12 விவசாய சேவைகள் மத்திய நிலையங்கள் ஊடாக தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விவசாய சேவைகள் உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Continue Reading