இலங்கை செய்திகள்
வவுனியா செட்டிக்குளத்தில் கேரளா கஞ்சாவுடன் 18வயது இளைஞன் கைது

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுவாகை பகுதியில் இன்று (12.12) அதிகாலை கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செட்டிக்குளம் பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் துட்டுவாகை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு பொலிஸார் விஜயம் மேற்கொண்டனர்.
இதன் போது 250கிராம் கேரளா கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியினை சேர்ந்த 18வயது இளைஞனோருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளனர்.
Continue Reading