இலங்கை
வவுனியா நகர கொரோனா கொத்தணி 273ஆக அதிகரிப்பு!

வவுனியா நகர கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொடர்புடையவர்களிடம் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் மூவர் வவுனியா நகர கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மூவர் அடங்குகின்றனர்.
மற்றொருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு தொற்று உள்ளமை அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கணவருக்கே தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
மற்றைய இருவரும் மன்னார் வைத்தியசாலையில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற வந்த நோயாளி. மற்றையவர் நோட்டா ஊடாக பயிற்சி பெற வந்த பயிற்சியாளர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.