Connect with us

சர்வதேசம்

வூஹான் சந்தையை பார்வையிட்ட விஞ்ஞானிகள்!

Published

on

கொரோனா வைரஸின் தோற்றம் என நம்பப்படும் வூஹானின் கடல் உணவு சந்தையை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.
உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொரோனா வைரசுக்கு ஒரு வயது ஆகிறது. உலக சுகாதார நிறுவனம் தற்போது தான் அதன் தோற்றுவாயை ஆராய்ச்சி செய்து வருகிறது. முதன் முதலில் சீனாவின் வூஹான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆரம்பகட்ட தகவல்களை வெளியிடாமல் சீனா மறைக்க முயற்சித்தது.

இதனை அந்நாட்டு அரசு மருத்துவர்கள் சிலரே தெரிவித்தனர். பின்னர் சீனாவில் வைரஸ் தோன்றவில்லை இத்தாலி, இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகள் மீது பழி போட்டது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் சீனாவின் வூஹான் நகருக்கு சென்றுள்ளனர். 2 வார தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். உலக சுகாதார நிறுவன குழுவில், கால்நடை மருத்துவர்கள், வைரஸ் ஆய்வாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் மிகப்பெரிய இறைச்சி சந்தையை பார்வையிட்டனர். அங்கு ஏராளமான கடைகள் உள்ளன. கடல் உணவு சந்தையில் ஆய்வு செய்தனர். முன்னதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையை பார்வையிட்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *