இலங்கை
வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை!

எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் ராஜாங்கணை நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ் நிலப்பிரதேசங்களில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கருவலகஸ்வெவ, வனாதவில்லுவ ஆகிய பிரதேச செயலகத்திற்கு சொந்தமான கலா ஒயாவின் தாழ்நிலப்பிரதேசங்களில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி கலா ஒயாவின் நீரேந்து பிரதேசங்களில் பதிவாகியுள்ள நிலையில், ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இவ்வாறு சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பிரதேசங்களில் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கலா ஓயாவினை பயன்படுத்துவது ஆபத்தானது என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.