இலங்கை
வைத்திய அதிகாரிக்கு கொரோனா உறுதி! தலைமை வைத்திய அதிகாரி எடுத்த முடிவு!

கண்டி பஸ்பாகே கோரளை சுகாதர வைத்திய அதிகாரி காரியலயத்தின் மேலதிக வைத்திய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கடந்த 10 ஆம் திகதி நாவலபிட்டி நகரிலுள்ள காப்புறுதி நிலையமொன்றில் கடமையாற்றிய ஊழியர்கள் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த ஐவரில் ஒருவர் மேற்படி வைத்தியரின் நாவலபிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்து சென்றதையடுத்து குறித்த வைத்தியர் தாமாக முன்வந்து மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார். இதன்படி இன்று தொற்று உறுதியானது
இதனையடுத்து வைத்தியரின் குடும்பம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக இன்னொரு பொது சுகாதார பரிசோதகரை காரியாலய செயற்பாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பஸ்பாகே கோரளை சுகாதார வைத்திய காரியாலயத்தின் தலைமை வைத்திய அதிகாரி எம். யூசுப் தெரிவித்துள்ளார்.