இலங்கை
ஹோட்டல் செலவுகள் குறைக்கப்படும்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இரண்டு நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலுக்காக ஹொட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவோரிடம் அறவிடப்படும் பணத்தின்; அளவை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
´வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரண்டு நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் பணிப் புரியும் இலங்கையர்களை அழைத்து வருவதிலேயே பிரச்சினையுள்ளது. ஒன்று இலங்கையில் தயார்ப்படுத்தப்பட்ட விமானங்கள் ஒரு நாளில் ஒரு தடவையே பயணத்தில் ஈடுப்படுகின்றது. அவ்வாறு பல நாடுகளில் இருந்து பல்வேறு விமான சேவைகள் நாட்டுக்கு வருகின்றன.
இவற்றில் 75 இலங்கை பணியாளர்களை அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5,4,3 நட்சத்திர விடுதிகளோடு பேசியுள்ளோம். அந்த பேச்சுவார்த்தைகளுக்கு அமைய நாளை அல்லது நாளை மறுதினம் அளவில் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் செலவுகள் குறைவடையும்.´ என்றார்.