Connect with us

இலங்கை

1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் பதிவுகளை எட்டிய கொமர்ஷல் வங்கியின் ePassbook

Published

on

இலங்கை கொமர்ஷல் வங்கியின் ePassbook செயலியின் தரவிறக்கங்களின் எண்ணிக்கையானது அண்மையில் அனுமதிக்கப்பட்ட சுய பதிவு தெரிவை அடுத்து வெறும் 6 மாதங்களில் 150,000 ஆல் அதிகரித்துள்ளதாக இலங்கையின் மிகப்பெரிய தனியார் வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் தெற்காசியாவின் வங்கித் துறையில் முதல் டிஜிட்டல் passbook ஆன ComBank ePassbook 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இப்போது விநாடிக்கு 20 என்ற விகிதத்தில் பாவனையாளர்கள் இந்த செயலியினுள் உள்நுழைவதுடன் நிமிடத்திற்கு சராசரியாக 1,000 க்கும் மேற்பட்ட செயற்படு பாவனையாளர்களையும் 1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் பதிவுகளையும் கொண்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த புரட்சிகர செயலியானது அண்மையில் தனிநபர் கணக்குகளுக்கான சுய பதிவு நிகழ்நேர பணப்பரிமாற்றத்துக்கான அறிவித்தல்கள் மற்றும் கைவிரல் பதிவு முக அடையாளம் போன்ற உயிரியல் பண்புக் கூறுகளைப் பயன்படுத்தி கணக்கு வைத்திருப்பவர் இந்த செயலிக்குள் பிரவேசிக்க உதவும் சிறப்பம்சங்களுடன் தரமேற்றப்பட்டதுடன் இவை அனைத்தும் அணுகல் பல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் பாவனையாளருக்கு பூரண அதிகாரத்தையும் சௌகரியத்தையும் வழங்குகின்றது.

இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுய பதிவு தெரிவானது இந்த செயலியின் தரவிறக்கத்தின் அதிகரிப்பிற்கான பிரதான காரணமென்பதுடன் இந்த சிறப்பம்சத்தின் மூலம் கணக்கு உரிமையாளர்கள் அந்தந்த கிளைகளுக்கு செல்லாமலேயே செயலியை செயற்படுத்திக் கொள்ள முடியும். அதனுடன் சுயமான இணைவு விலகல் அல்லது குழு நடைமுறைக் கணக்கு சேமிப்புக் கணக்கு மற்றும் கிரடிட் கார்ட் சேவை என்பனவற்றுக்கும் இந்த ComBank ePassbook தரமேற்றப்பட்ட செயலியில் வழியமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் எதிர்கால மேம்படுத்தல்களில் எல்லையற்ற பரிவர்த்தனை விபரங்கள் வசூலிக்கப்படாத காசோலைகள் கணக்கு பற்றுகள் மற்றும் நடைமுறை கணக்குகளுக்கான மொத்த மேலதிகப்பற்று எல்லை ஆகியவற்றை பார்வையிடுவதற்கான வசதி ஆகியன அடங்கும். நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் கடன்களின் விபரங்களை ஒன்லைனில் காணும் வசதி விபரங்களைக் கண்காணிக்கவும் நாட்டின் மூன்று மொழிகளிலும் செயலியை இயக்கும் வசதியும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

ComBank ePassbook மொபைல் செயலி 2016 ஆம் ஆண்டு கொமர்ஷல் வங்கியின் முன்னோடி தயாரிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இது “Passbook” என்ற எண்ணக்கருவை புரட்சிகரமாக்கியது. இது இலவசமாக வழங்கப்படுவதுடன் ஸ்மார்ட்போன் மூலம் வாடிக்கையாளரின் கணக்குகளுக்கு உடனடி அணுகலை வழங்குகின்றது. மேலும் விசாரணை நோக்கங்களுக்காக பௌதீகரீதியான பாஸ் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும் அல்லது ஒன்லைன் வங்கி அல்லது மொபைல் வங்கி போன்ற கட்டணம் செலுத்தும் வங்கி வசதியையும் பெற வேண்டிய தேவைகளை இல்லாது செய்கின்றது.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் விளங்கும் கொமர்ஷல் வங்கி, 2020ஆம் ஆண்டில் சர்வதேச உள்நாட்டு விருதுகள் என 25க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றது. இலங்கையில் 268 கிளைகளையும் 887 தானியங்கி வங்கி இயந்திரங்கள் (ஏ.டி.எம்), பணத்தை மீளப்பெறவும் பணத்தை வைப்பிலிடவும் பயன்படும் இயந்திரங்கள் (சி.ஆர்.எம்) ஆகியவற்றையும் கொண்ட வலையமைப்பை அவ்வங்கி கொண்டுள்ளது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.