சினிமா
காதலனை சந்திக்க முடியாமல் தவிக்கும் நயன்

காதலனை சந்திக்க முடியாமல் தவிக்கும் நயன்
ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுடன் நடந்து வருகிறதாம்.
படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் இருக்கிறார்களாம். கடந்த ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட்ட அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் ‘அண்ணாத்த’ டீமிற்கும் செய்யப்பட்டுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு தீவிர பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
பயோ பபுள் முறையால் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருகிறாராம். விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது. ஒரே ஊரில் இருந்தும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள முடியவில்லையாம்.
