Connect with us

அறுசுவை

வாழைக்காய் மிளகு வறுவல்

Published

on

வாழைக்காய் மிளகு வறுவல்


தேவையான பொருட்கள்
  • வாழைக்காய் – 1
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • பெருங்காயத் தூள் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
அரைக்க தேவையான பொருட்கள்
  • தேங்காய் – 2 தேக்கரண்டி
  • இஞ்சி – சிறு துண்டு
  • பூண்டு – 5
  • மிளகு – 3 தேக்கரண்டி

செய்முறைவாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

வேகவைத்த வாழைக்காயை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின்னர் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேகவைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் தயார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *