சர்வதேசம்
30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தன் நான்கு ஆண்டு நிர்வாகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களை கூறியதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப், தன் பதவிக் காலத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து கூறியுள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து, அமெரிக்க ஊடகங்கள் ஆய்வு செய்துள்ளன. அதன்படி, நான்கு ஆண்டுகளில் மட்டும் அவர், 30 ஆயிரத்து, 573 பொய் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதிபராக இருந்த முதல் ஆண்டில், சராசரியாக, நாளொன்றுக்கு, ஆறு பொய் தகவல்களை கூறியுள்ளார். இரண்டாம் ஆண்டில், அது 16 ஆக உயர்ந்தது. மூன்றாம் ஆண்டில், 22 ஆகவும், நான்காம் ஆண்டில், 39 ஆகவும் உயர்ந்துள்ளது.கடந்தாண்டு நவ.,3ல் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின் மட்டும், 800 பொய் தகவல்களை அவர் கூறியுள்ளார்.