இலங்கை
300 மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று(30.01.2021) காலை 300 மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு 1700 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் , வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் துறையினர் , நோயாளர் காவு வண்டி சாரதிகள் என 300 நபர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.
அந்தவகையில் முதலாவது தடுப்பூசியினை வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் ஏற்றியதுடன் இரண்டாவதாக தொற்று நோயியல் நிபுணர் லவன் அவர்களும் மூன்றாவதாக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் அவர்களும் நான்காவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் த.காண்டிபன் அவர்களும் ஏற்றிதை தொடர்ந்து ஏனைய மருத்துவதுறை சார்ந்தவர்களுக்கு ஏற்றப்பட்டது.