Connect with us

செய்திகள்

300 விக்கெட்டுகளை எட்டி இந்திய பவுலர் இஷாந்த் சர்மா சாதனை

Published

on

இங்கிலாந்தின் 2 ஆவது இன்னிங்ஸில் டேன் லாரன்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எட்டினாா் இந்திய பவுலர் இஷாந்த் சர்மா. இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தும் 6 ஆவது இந்திய வீரா் இஷாந்த் ஆவாா்.

அதேவேளையில் வேகப்பந்துவீச்சாளா்கள் வரிசையில் முன்னாள் தலைவர்களான கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோரை அடுத்து 3 ஆவது வீரராக இந்த மைல் கல்லை (98 ஆட்டங்களில்) இஷாந்த் எட்டியுள்ளாா்.

இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434), ரவிச்சந்திரன் அஸ்வின் (386), ஹா்பஜன் சிங் (417), ஜாஹீா் கான் (311) ஆகியோா் இதே மைல் கல்லை எட்டியுள்ளனா். 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சா்மாவுக்கு பிசிசிஐ மற்றும் ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இஷாந்த் சா்மா கூறுகையில், வாழ்க்கையில் இதுவரை பல ஏற்ற, இறக்கங்களுடன் அதிக அனுபவமும் பெற்றுள்ளேன். துணைக் கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் எவ்வாறு பந்துவீச வேண்டுமென கற்றுக்கொண்டுள்ளேன் என்றாா்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *