சர்வதேசம்
60 பயணிகளுடன் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாயம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 60 பயணிகளுடன் புறப்பட்ட விமானதின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீ விஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.
போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue Reading