Connect with us

அழகு குறிப்புகள்

கண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்

Published

on

கண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க பராமரிப்பு மட்டும் செய்தால் போதாது. இந்த உணவுகளையும் உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும்.

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள் எப்போதும் முகத்தில் தனித்து காட்டக்கூடியவை. இன்று பெண்கள் போன்று ஆண்களுக்கும் இவை எளிதாக வருகிறது. ஆனால் இதை அகற்றுவதும், இதிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதும் சற்று கடினமான விஷயம் தான். கருவளையம் போக்க செய்யும் பராமரிப்பு தாண்டி உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட இந்த உணவுகள் உங்கள் கருவளையத்தை பொறுமையாக ஆனால் நன்றாகவே குணப்படுத்தும். அப்படியான உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கண்களுக்கு கீழ் இருக்கும் வட்டங்களால் உண்டாகும் கருவளையம் பெரிய பிரச்சனை என்றே சொல்லும் அளவுக்கு அழகை சேதப்படுத்துகிறது. இளம் தலைமுறையினர் பலரும் அவர்களது பணிச்சுமை காரணமாக அதிகமாகவே இதை பெறுகிறார்கள். குறிப்பாக கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் இருப்பவர்கள் அதிகமாகவே இந்த கருவளையத்தை எதிர்கொள்கிறார்கள்

இதனால் ஒவ்வொரு முறை கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் கருவளையம் தனியாக காட்டுகிறது. இது தீவிரமாகும் போது கண்களுக்கு கீழ் சுருக்கத்தையும் தந்துவிடுகிறது. அதனால் பராமரிப்போடு சுருக்கத்தையும் தந்துவிடும்.

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்களை போக்க கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் ஒவ்வொரு பருவத்திலும் கிடைககூடியவை. இதை கொண்டு உங்கள் உணவில் அதிகமாக சேர்ப்பது மற்றும் குறைக்க வேண்டியது என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

வேர்க்கடலை என்றும் அழைக்ககூடிய நிலக்கடலை குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கிறது. இது உடலுக்கு உஷ்ணத்தன்மை கொடுப்பவை. அதனால் கோடைக்காலத்தில் கிடைக்கும் போது இதை குறைவாக எடுத்துகொள்ள வேண்டும்.

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை போக்க இவை உதவும். ஏனெனில் இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் தோல் செல்களை சரி செய்யவும் வேலை செய்கிறது.

பப்பாளி செரிமானத்துக்கு மிகவும் நல்லது. இது இருண்ட வட்டங்களை அகற்றுவதில் வேகமாக வேலை செய்கிறது. செரிமானப்பிரச்சனை உண்டாகும் போது அது உண்டாக்கும் பாதிப்பில் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையமும் ஒன்று. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை உண்டு.

வைட்டமின் ஏ கண்களை ஆரோக்கியமாகவும், அதை சுற்றியுள்ள மென்மையான சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அவசியம் தேவை. வைட்டமின் சி சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது. அதனால் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மறைய செய்கிறது

பாதாம் சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்துக்கு நல்லது. சருமத்தில் கருமை பிரச்சனை இருந்து அதை வெளியேற்ற விரும்பினால் தினமும் காலை அல்லது மதிய உணவுக்கு முன்பு 20 பாதாம் சாப்பிட வேண்டும். உடன் ஒரு தம்ளர் பால் குடிக்க வேண்டும். பால் அப்போது குடிக்க வில்லை என்றாலும் இரவு தூங்கும் முன்பு பால் குடிக்கலாம்

பாதாமின் ஊட்டச்சத்தை பெறுவதன் முலம் கரும்புள்ளிகளை போக்க உங்களுக்கு இருக்கும் மற்றொரு வழி உங்களுக்கு பிடித்த சுவையிலும் எடுக்கலாம்.

1 டம்ளர் பால், 20 பாதாம் மசித்து ( ஊறவைத்து தோல் நீக்கிய) சேர்த்து காய்ச்சி அதில் தேன் கலந்து குடிக்கலாம். இதை காலை உணவுக்கு பிறகு, பிற்பகல் உணவுக்கு பிறகு மாலை நேரத்தில் குடிக்கலாம். இரவிலும் குடிக்க செய்யலாம். கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் விரைவாக மறையக்கூடும்.

பீட்ரூட் சுவை சற்று மண் கலந்தாற் போன்று இருக்கும். இனிப்பை காட்டிலும் இது தனித்து தெரியும். அதனால் பீட்ரூட் சாறு குடிப்பதை பலரும் தவிர்த்துவிடுவார்கள். ஆனால் பீட்ரூட் உடன் கேரட், மாதுளை, தக்காளி கலந்து சாறாக்கி குடிக்கலாம். அல்லது பீட்ரூட் துருவி சாலட் ஆக்கி எடுக்கலாம்.

பீட்ரூட்டை மேற்கண்ட முறையில் சாப்பிடலாம். ஆனால் கண்டிப்பாக வாரத்தில் மூன்று அல்லது இரண்டு முறையாவது எடுக்க வேண்டும். இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது கண்களில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகத்தின் பளபளப்பை மேலும் அதிகரிக்க செய்யலாம்.. பீட்ரூட்

விதைகள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. சூரியகாந்தி விதைகள் எளிதாக கடைகளில் கிடைக்கும். இதை சிற்றுண்டியாக சாப்பிடும் சாலட்களில் கலந்து சாப்பிடலாம். தினமும் 3 முதல் 4 டீஸ்பூன் வரை இதை சாப்பிடலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். இது உடலுக்கு வேண்டிய முழுமையான ஊட்டச்சத்தை கொடுக்கும். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டால் நீங்கள் கருமையான வட்டங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

ஒவ்வொரு பருவத்திலும் பல்வேறு வகையான பச்சை காய்கறிகள் கிடைக்கின்றன. இந்த காய்கறிகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேலை செய்கின்றன. சரியான நேரத்தில் சரியான காய்கறிகளை எடுத்துகொண்டால் மட்டுமே கருவளையத்துக்கு பலன் அளிக்கும்.

ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் கீரைகளை எடுத்துகொள்ள வேண்டும். கோடையை காட்டிலும் குளிர்காலத்தில் கீரைகள் எடுக்கும் போது நன்மைகள் முழுமையாக கிடைக்கும்.

மேற்கண்டவை எல்லாமே உங்கள் பராமரிப்போடு சேர்த்து எடுக்கும் போது கருவளையம் மறையக்கூடும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *