Connect with us

இலங்கை

அரசாங்கம் எல்லா விடயங்களிலும் சீனாவையே முன்னுதாரணமாக கொண்டு செயற்படுகின்றதா?

Published

on

 ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் எல்லா விடயங்களிலும் சீனாவையே முன்னுதாரணமாக கொண்டு செயற்பாடுகின்றதா? என்கிற வலுவான நியாயமான சந்தேகம் அரசியல் அவதானிகளுக்கு மாத்திரம் அன்றி சாதாரண பொதுமக்களுக்கும் ஏற்பட்டு உள்ளது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும்,, சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

இவரின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று  திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து சம கால அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது இவர் இது தொடர்பாக தெரிவித்தவை வருமாறு

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சரவை பேச்சாளர். அரசாங்கத்தின் சார்பாக பேச வல்லவர். அவரின் கருத்து என்பது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் வெளிப்பாடு ஆகும். ஜனாஸாக்களை எரித்துதான் ஆக வேண்டும் என்பதில் அரசாங்கம் எந்தவொரு சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் மிக திடமாக உள்ளது என்பதை கடந்த நாட்களில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில் வெளிப்படையாகவே எத்தி வைத்து உள்ளார்.

ஜனாஸக்களை எரித்துதான் ஆக வேண்டும் என்பதில் அரசாங்கம் ஒரேயடியாக கிடுங்கு பிடியாக இருக்கின்றது என்பதை அவர் மூலமாக அரசாங்கம் முதன்முதலாக பகிரங்கமாக அறிவித்து உள்ளது என்றுதான் கொள்ள வேண்டி உள்ளது. அவர் என்ன சொல்லி இருக்கின்றார் என்றால் சீனாவில் உடலங்கள் எரிக்கப்படுகின்றன, ஆனால் அதை யாரும் ஆட்சேபிக்கவோ, கேள்விக்கு உட்படுத்தவோ இல்லை.

அவர் இவ்வாறு தெரிவித்து இருப்பது ஜனாஸாக்கள் விடயத்தில் முஸ்லிம்கள் விரும்புகின்ற தீர்வு அரசாங்கத்தால் வழங்கப்பட போவதே இல்லை என்பதை அப்பட்டமாக கட்டியம் கூறி நிற்பதுடன் இது விடயத்தில் சர்வதேச சமூகத்தின் எந்தவிதமான தீர்வு யோசனைகளையும் அரசாங்கம் ஏற்று கொள்ள போவதே இல்லை என்பதையும் மிக தெளிவாக காட்டி நிற்கின்றன.

அதே நேரத்தில் ஜனாஸா எரிப்பு விடயத்தில் மாத்திரம் அன்றி எல்லா விடயங்களிலுமே அரசாங்கம் சீனாவையே முன்னுதாரணமாக கொண்டு செயற்படுகின்றதா? என்கிற வலுவான நியாயமான சந்தேகம் அரசியல் அவதானிகளுக்கு மாத்திரம் அன்றி சாதாரண பொதுமக்களுக்கும் ஏற்பட்டு இருக்கின்றது. 

சீனாவில் உய்கூர் மாநில முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்தேச்சையாக இழைக்கப்பட்டு வருகின்ற அநியாயங்கள் உலகம் அறிந்தவை. அவற்றை காட்டிலும் மிக மோசமான பேரவலத்துக்கு இலங்கை முஸ்லிம்கள் நிரந்தரமாக தள்ளப்பட்டு விட கூடும் என்று உண்மையிலேயே பெரிதும் கவலைப்பட நேர்ந்து உள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவி வருவது பிரிக்க முடியாத தொப்பிள் கொடி உறவு ஆகும். இந்நாட்டின் பூர்வீகங்கள் இந்தியாவில் இருந்து வந்தவைதான். கலை, கலாசார, பண்பாட்டு, வாழ்வியல் ரீதியாக இந்தியாவும், இலங்கையும் ஒன்றுபட்டு நிற்பவை. எனவே இலங்கை விடயத்தில் இந்தியாவின் மேலான அக்கறையை அழுத்தமாக இலங்கை அரசாங்கம் பார்க்க கூடாது என்பதுடன் உதாசீனம் செய்து விடவும் முடியாது. அதே நேரத்தில் கலை, கலாசார, பண்பாட்டு, வாழ்வியல் ரீதியாக எந்தவொரு சம்பந்தமும் இல்லாத வேற்று நாடுகளின் பாதையை முன்னிலைப்படுத்தி பின்பற்றுவது என்பது எந்த வகையிலும் பொருத்தமானதோ, ஏற்புடையதோ, ஏற்க கூடியதோ அல்ல.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *