சர்வதேசம்
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியவர்கள் பலி!

அதிக வயதானவர்களுக்கும் பலவீனமாக இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவது ஆபத்தானது என்று நோர்வே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. தற்போது வரை உலகெங்கும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளும் கொரோனா ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பல நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் ஃபைசர் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு முதலில் பிரிட்டன் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. குறிப்பாக, உலக சுகாதார அமைப்பும் ஃபைசர் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், நோர்வே நாட்டில் ஃபைசர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வயதானவர்கள் என்று குறிப்பிட்ட சுகாதாரத் துறையினர், தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் ஏற்படும் சாதாரண பக்க விளைவுகளைக்கூட அவர்களின் உடல்களால் தாங்க முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
மிகவும் பலவீனமாக உள்ளவர்களுக்கு லேசான தடுப்பூசி பக்க விளைவுகளும்கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். மேலும், வயதில் மூத்தவர்களுக்கும் மிகக் குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்களுக்கும், தடுப்பூசியால் ஏற்படும் நன்மை மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மிகவும் பலவீனமாக உள்ளவர்களுக்கு லேசான தடுப்பூசி பக்க விளைவுகளும்கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். மேலும், வயதில் மூத்தவர்களுக்கும் மிகக் குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்களுக்கும், தடுப்பூசியால் ஏற்படும் நன்மை மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல பிரான்ஸ் நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதியவர் ஒருவர், அடுத்த இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்தார். தடுப்பூசி குறித்து நம்பகத்தன்மையை இச்சம்பவம் கேள்விக்குள்ளாக்கியது. இருப்பினும், உடல்நிலை காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும், தடுப்பூசிக்கும் உயிரிழப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அந்நாட்டுச் சுகாதாரத் துறையினர் விளக்கம் அளித்தனர்.