இலங்கை
பாவனைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூழ்கடிக்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

இலங்கையில் மீன் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாவனைக்கு உதவாத வாகனங்களை கடலில் மூழ்கடிக்கும் செயல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் காலியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இது குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாவனைக்கு உதவாத சில பேருந்துகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் கொண்டு செல்லப்பட்டு குறித்த பேருந்துகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.