ஆன்மீகம்
பிரதோஷவிரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு.
செவ்வாய் கிழமையில் செவ்வாயின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். எனவே இந்நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால், மேஷம், விருச்சிக லக்னம் மற்றும் ராசியினருக்கும், செவ்வாய் தசை – புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் அகலும்.
செவ்வாய் தோஷம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும். கடன் நிவர்த்தி ஆகும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும்
சொத்து தொடர்பான வம்பு, வழக்கு வில்லங்கங்களில் இருந்து மீள முடியும். இனம் புரியாத நோய், அடிக்கடி விபத்தை சந்திப்பவர்களுக்கு, கண்டம் அகலும். விளையாட்டு வீரர்கள், ராணுவம், காவல் துறையினர் ஏற்றம் பெறுவர். ரியல் எஸ்டேட், கட்டிட கலைஞர்களுக்கு தொழில் அபிவிருத்தி ஏற்படும். பலனை அதிகரிக்க மாதுளைச் சாறு கொண்டு நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.