இலங்கை
வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்…

வடக்கு மாகாண ரீதியில் வவுனியாவில் குத்துச்சண்டை பயிற்சி பட்டறையும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று முன் தினம் (14) நடைபெற்றது.வடக்கு மாகாண பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் இப்பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.இலங்கை பிரேஞ் சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவரும், சர்வதேச தலைமை பயிற்றுவிப்பாளருமாகிய சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க வளவாளராக கலந்துகொண்டு வடக்கு மாகாண வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தார். அத்துடன் அமைப்பின் பிரதித்தலைவர் காசன் ஜெயசேகர, செயலாளர் பாரீஸ் மௌலானா, பொருளாளர் சரீட் சோனல் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 வீர, வீராங்கனைகளுக்கு கிக் பொக்சிங் பயிற்சி பட்டறையானது 13-02-2021 மற்றும் 14-02-2021 வரை நடைபெற்று நேற்று முன் தினம் மாலை பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் பிரதித் தலைவர் கெ.குமாரசாமி, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், சமூகசேவையாளர் எஸ்.கஜேந்திரகுமார், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கெ.கமலன், வர்த்தகரும், சமூக ஆர்வலருமான எஸ்.ரூபன் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் ஆர்.சுவிதர் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.